இ.எம்.ஐ மூலமாக மட்டன் சிக்கன்: எங்கு தெரியுமா?

கோவையில் இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் இறைச்சி வாங்கிக் கொள்ளலாம் என்று இறைச்சி விற்பனையாளர் ஒருவர் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இ.எம்.ஐ மூலமாக மட்டன் சிக்கன்: எங்கு தெரியுமா?

கோவையில் இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் இறைச்சி வாங்கிக் கொள்ளலாம் என்று இறைச்சி விற்பனையாளர் ஒருவர் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதி சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் குனியமுத்தூர் பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை  செய்து வருகிறார். இது குறித்து இறைச்சி விற்பனையாளர் ரியாஸ் அகமது கூறுகையில், குனியமுத்தூர் பகுதியில்  அல்.அமீன் மட்டன் சிக்கன் கடை வைத்து உள்ளேன்.  

பல கடைகளில்  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இஎம்ஐ விருப்பத்தேர்வு கொடுத்து வருகிறார்கள். பொதுவாக  செல்போன், டிவி,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அனைத்திற்கும் இஎம்ஐ விருப்பத்தேர்வு கொடுப்பது வழக்கம்.

அதனால் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்காக நாம் என் கொடுக்கக் கூடாது என நினைத்தேன். குறிப்பாக  சாமானிய மக்கள் ஒரு பெரிய நிகழ்ச்சிக்காக இறைச்சி வாங்கும்போது ஒரு பெரிய தொகை செலவு ஆகும். இதனை  இ.எம்.ஐ மூலமாக இறைச்சியை கொடுத்தால் அவர்கள் பாரமின்றி கட்டுவார்கள். கறிக்கடை வரலாற்றில் மட்டன் மற்றும்  சிக்கன் ரூ.5000 மேல் வாங்கினால் இ.எம்.ஐ  கட்ட   மூன்று மாதம், ஆறு மாதம், ஒன்பது மாதம் ,12 மாதம் என தவணை முறையில்  கொடுத்து வருகிறோம். 

மூன்று மாதத்துக்கு வட்டித் தொகை  170 ரூபாய் ஆகும் எனவும்,  கல்யாணம் போன்ற  நிகழ்ச்சிக்காக 500  முதல் 700 கிலோ வரை இ.எம்.ஐ மூலமாக வாங்கிக் கொள்ளலாம். மேலும்  ரம்ஜான் பண்டிகைக்காக  மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும்  பொதுமக்களில் நலனுக்காகவே இதனை கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

பொதுமக்களிடையே இந்த  இ.எம்.ஐ கட்டணத்தில் இறைச்சி விற்பனையானது நல்ல வரவேற்பு பெரும் என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக இறைச்சி விற்பனையாளர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com