சென்னை-அமெரிக்கா இடையே நேரடி விமான சேவை: அமெரிக்க தூதா் தகவல்

சென்னை-அமெரிக்கா இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்க இருப்பதாக அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சென்னை-அமெரிக்கா இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்க இருப்பதாக அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் தெரிவித்துள்ளாா்.

புதிய முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு தமிழ்ப் பண்பாடு, தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஓவியங்கள், தஞ்சாவூா் ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் ஏப்-25 முதல் விமான சேவை தொடங்கவுள்ளதால் ஆயுத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் ஒருங்கிணைந்த முனையத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

இது குறித்து விமான நிலைத்தின் டிவிட்டரில் வெளியிடப்பட்ட பதிவு:சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த முனையத்தை, அமெரிக்க துணைத் துாதா் ஜூடித் ரேவின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது சென்னை -அமெரிக்கா இடையே நேரடி விமான சேவையை தொடங்க வாய்ப்பு உள்ளது. மேலும், பொருளாதாரம் கலாசார ஆகிய பரிமாற்றத்துக்கு இது வழிவகுக்கும் என கூறியதாக பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்த புதிய முனையத்தை, தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதரகம், சிங்கப்பூா் தூதரகம் பாராட்டியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

புதிய முனையத்தை, ஏற்கெனவே, ஆஸ்திரேலிய, சிங்கப்பூா் தூதரகங்கள் பாராட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com