ரமலான் திருநாள்: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் திருநாளையொட்டி நாடு முழுவதும் பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். 
ரமலான் திருநாள்: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை
Updated on
1 min read

ரமலான் திருநாளையொட்டி நாடு முழுவதும் பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். 

புதுச்சேரி  வில்லியனூர் சுல்தான்பேட்டை ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுச்சேரி சுடற்கரையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்ற தொழுகையிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டனர். 

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு  சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்
சிறப்பு தொழுகை நடைபெற்றது. சாந்தி நகர் திடலில் நடைபெற்ற இந்த தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

திருச்சி உழவர் சந்தை வளாகத்திலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com