அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்  ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து, கோடை வெயில் சற்று தணிந்ததுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com