கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் நாளை வாபஸ் பெற முடிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போடியிட, வேட்புமனு தாக்கல் செய்த 2 வேட்பாளர்களும் நாளை தங்களது வேட்புமனுக்களை திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போடியிட, வேட்புமனு தாக்கல் செய்த 2 வேட்பாளர்களும் நாளை தங்களது வேட்புமனுக்களை திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பெங்களூருவில் புலிகேசி நகர் தொகுதியில் டி.அன்பரசனை வேட்பாளராக அறிவித்தது. அதன்படி, அவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 

இதனிடையே, ஓபிஎஸ் தரப்பின் சார்பில் எம்.நெடுஞ்செழியன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தனது வேட்பாளர் நெடுஞ்செழியனுக்கு அதிமுகவின் வேட்பாளராக அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி ஓபிஎஸ் அதற்குரிய படிவத்தை அளித்திருந்தார். 

ஆனால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.்ன்பரசனை தொகுதி தேர்தல் அதிகாரி அங்கீகரிதுள்ளார்.

இதனிடையே, எம்.நெடுஞ்செழியனின் வேட்புமனுவில் கையொப்பமிடவில்லை என்று, அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

ஆனால், ஓபிஎஸ் தரப்பில் காந்திநகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் ஏ. ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படாது மாறாக இருவரும் சுயேச்சை வேட்பாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், தனது தரப்பில் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களுக்கும் ஏ மற்றும் பிபடிவங்களை அளித்துள்ள ஓபிஎஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அது தொடர்பாக சம்மந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுள்ளார்.

அந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கர்நாடக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.வெங்கடேஷ்குமார் தெரிவித்தார். 

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த 2 வேட்பாளர்களும் நாளை வேட்புமனுவை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக எனக்கூறி வேட்புமனு தாக்கல் செய்த, காந்த நகர் தொகுதி வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வேட்புமனுவை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இரட்டை சின்னம் கிடைக்காத நிலையில், வேட்புமனு திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com