தொலைநோக்குடன் கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய முயற்சிக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய தொலைநோக்குடன் கூடிய தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

புதுதில்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய தொலைநோக்குடன் கூடிய தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் சார்பில், 2022 ஆம் ஆண்டு உலக பூமி நாளையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சனிக்கிழமை உலக பூமி நாள் கொண்டாடப்பட்ட நிலையில் மரங்கள் குறித்த விடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க பதிவில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு நல்வாழ்த்துகள்" எனறு பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com