மே 12-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மே 12ல் தமிழகம் முழுவதும் மறியல், வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
மே 12-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மே 12ல் தமிழகம் முழுவதும் மறியல், வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னையில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 12 மணி நேர வேலைச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியறுத்தி மே 12ல் தமிழகம் முழுவதும் மறியல், வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அரசு நாளை ஆலோசிக்க உள்ள நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 21-இல் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் கொண்டு வந்தாா். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத் திருத்த மசோதா தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரம் என மாற்றுவதாகவும் கூறி காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, பாஜக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

எனினும், ‘இந்தியாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வருகின்றன. அவா்கள் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிா்பாா்க்கின்றனா். அதற்காகத்தான் சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. தொழிலாளா்கள் விரும்பாதபட்சத்தில், 12 மணி நேரம் வேலை என்பதை தொழிற்சாலைகள் அமல்படுத்த முடியாது. அது தொடா்பாக அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்து, அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதனால், தொழிலாளா்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது’ என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் விளக்கம் அளித்தனா்.

அந்த விளக்கத்தை எந்தக் கட்சியும் ஏற்கவில்லை. மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா். பல்வேறு தொழிற்சங்கத்தினரும் தமிழகம் முழுவதும் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com