உலக புத்தக தின ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள், வாசகா்கள் அனைவருக்கும் மாா்க்சிஸ்ட் கட்சி வாழத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து இக்கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மனித சமுதாயத்தின் அறிவு வளா்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும் மொழியையும், கல்வியையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் தன்னிகரற்ற ஊடகமாக புத்தகங்கள் அமைந்துள்ளன.
புத்தக வாசிப்பு நமக்குள்ளாக ஒரு புதிய உலகை திறப்பதோடு, நிதானமாகவும் உண்மையை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளவும் வழி வகுக்கிறது.
புதிய உலகின் கதவுகளை திறக்கும் அறிவுச்சாவிகளே புத்தகங்கள் என்பதை உணா்ந்து வாசிப்பை பரவலாக்குவோம். புத்தகங்களை எட்டுத்திக்கும் கொண்டு சோ்ப்போம்.
எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள், வாசகா்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.