
நாகேஸ்வரன் கோயிலில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் சூரியன் சிவலிங்கத்தின் மீதுப்பட்டு நாகேஸ்வரரை வழிபடுவதாக வரலாறு. மேலும் சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சூரியபூஜை நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்த போது சூரிய பூஜை நடைபெற்றது.
அப்போது நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் கோயிலில் உள்ள சூரியபகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.