பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கனையும் திறந்து வைத்து, பல்வேறு மாவட்டங்களில் கட்டப்படவுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்தினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் மானியத்திற்கான காசோலையை வழங்குகிறார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி்.பி. ராமன் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள பகுதியான, மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதிக்கு "வி.பி.ராமன் சாலை" எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.