சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஆக.6-ல் தொடங்கப்படாது: ரயில்வே விளக்கம்

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலை பிரதமர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைப்பதாக தகவல் வெளியான நிலையில், தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ ரயிலின் முதல் சேவை 2019-ஆம் ஆண்டு தில்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னை- பெங்களூரு, சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் 3- ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருநெல்வேலி- சென்னை எழும்பூா் இடையே ஆக. 6-ஆம் தேதிமுதல் இயக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com