சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரின் சிலை மற்றும் படத்துக்கு அரசியல் தலைவர்களும், மக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.