நாமக்கல் காசி விஸ்வநாதர் கோயிலில் திரளானோர் வழிபாடு!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் காவிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாமக்கல் காசி விஸ்வநாதர் கோயிலில் திரளானோர் வழிபாடு!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி பிறந்துவிட்டாலே விவசாயிகளும், பொதுமக்களும், பக்தர்களும் மிகுந்த உற்சாகமாகி விடுவது வழக்கம். காவிரியில் தண்ணீரின் அளவு அதிகரித்து விவசாயம் செழிப்பதோடு, கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். 

ஆடி 18 அன்று தங்களது கோயில்களில் உள்ள குல தெய்வத்தின் ஆயுதங்களை எடுத்து வந்து காவிரியில் சுத்தம் செய்தும், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செய்தும், சிறப்பு பூஜைகளை செய்தனர். பெண்கள் ஆடி 18 பண்டிகையன்று 18 நாள்கள் வீட்டில் முளைக்க வைக்கப்பட்ட நவதானியங்களான முளைப்பாரியை கொண்டு வந்தனர். பின்னர் குடும்பத்தினர், புதுமணத் தம்பதிகள் ஆகியோர் தங்களது தலையில் காசுகளை வைத்து காவிரியில் குளித்து பூஜைகள் செய்து தங்களது முன்னோர்களுக்கும், கன்னி தெய்வங்களுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் வாழை இலையில் காதோலை, கருகமணி, தேங்காய் பழங்கள், வெற்றிலை, பாக்கு, காப்பரிசி, புத்தாடை, மஞ்சள் தடவிய நூல் மற்றும் முளைப்பாரிகள் ஆகியவற்றை படைத்து வணங்கி பின்னர் அந்த முளைப்பாரிகளை ஆற்றில் விட்டனர். 

பிற்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது குல தெய்வ கோயில்களில் உள்ள ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்தனர். பின்னர் அருள்வாக்கு வந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று அதிகாலை முதலே நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காவிரி ஆற்றில் குளித்து ஆடி பதினெட்டு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருவி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com