பவானி கூடுதுறையில் ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தென்னகத்தின் காசி எனப்படும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் இன்று புனித நீராடினர்.
பவானி கூடுதுறையில் ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தென்னகத்தின் காசி எனப்படும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் இன்று புனித நீராடினர்.

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவதும், முன்னோர்களுக்கு பரிகார வழிபாடுகள் நடத்துவதும் வழக்கம். ஈரோடு மாவட்டத்தில், பவானி, காவிரி சங்கமிக்கும் கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

ஆண்கள், பெண்கள் தனித்தனியே பாதுகாப்புடன் நீராட தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி கூடுதுறையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்,  தீயணைப்பு படையினர் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

படித்துறைகளில் காய்கள், கனிகள் மற்றும் தானியங்கள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் காவிரித் தாயை வழிபட்டு மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். பரிகார மண்டபங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

தொடர்ந்து,  சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பவானி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com