தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர்
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தடைந்தார்.


ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தடைந்தார்.
கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மசினகுடிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சனிக்கிழமை வருகை தந்த அவா், அங்கிருந்து சாலை வழியாக தெப்பக்காட்டில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்குச் சென்றார். முகாமில், ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்தித்து வாழ்த்தினார்.

மேலும், முகாமில் உள்ள யானை பாகன்களிடமும் உரையாற்றினார். முகாமில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் சாலை வழியாக மசினகுடிக்குச் சென்ற குடியரசுத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூருக்குச் சென்று பின்னா் சென்னைக்கு திரும்பினார்.
குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, காவல் துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். இதில் தொரப்பள்ளி - தெப்பக்காடு சாலை, பந்திப்பூா் - தெப்பக்காடு - மசினகுடி சாலை பகுதிகளில் அதிரடிப் படையினா், நக்ஸல் தடுப்புப் படையினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

குடியரசுத் தலைவா் வந்து செல்லும் வரை தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள சாலைகள் மூடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...