தக்காளி விலை மேலும் குறைவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது. 

இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை உயா்ந்தது. சமையல் தேவைக்கு தக்காளி என்பது அத்தியாவசியமாக உள்ள நிலையில் தக்காளி விலை அதிகரித்தே வந்தது.

இந்நிலையில் ஆக.2 ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் திங்கள்கிழமை தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com