ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 
ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாகத் திகழும், திருத்தணி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இந்தக் கோயிலின் முக்கிய விழாவான ஆடிக் கிருத்திகை விழா புதன்கிழமை (ஆகஸ்ட் 9) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பச்சை மாணிக்கக்கல் தங்கவேல் தங்க கிரீடம் மற்றும் வயர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் காா், வேன், பேருந்துகள் மூலமாக வருகை தந்து மயில் காவடி, புஷ்பக் காவடி, பன்னீா் காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு பக்தி பாடல்களைப் பாடி வந்து முருகப் பெருமானை வழிபட்டு செல்வா்.

பக்தர்கள் வசதிக்காக அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆடிக் கிருத்திகையையொட்டி இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு குடும்பத்துடன் வந்திருந்து திருத்தணி முருகனை வழிபட்டனர். 

ஆடிக் கிருத்திகையையொட்டி பக்தா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, கைத்தறி- துணிநூல் துறை அமைச்சரும் திருவள்ளூா் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆா். காந்தி, மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் சுவாமியை எளிய முறையில் தரிசனம் செய்ய அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன், உதவி ஆணையா் பா. விஜயா, அறங்காவலா்கள் ஜி. உஷாரவி, கோ. மோகனன், வி. சுரேஷ் பாபு, மு. நாகன் உள்ளிட்டோா் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபாஸ் கல்யாண், டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் உள்ளிட்டோா் தலைமையில், 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com