
குரூப் 1 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு நாளை(ஆக.10) தொடங்குகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு நாளை நடக்கிறது. சென்னையில் மட்டுமே நடைபெறும் இந்தத் தோ்வானது, ஆக.13-இல் நிறைவடைகிறது.
முதல்நிலைத் தோ்வு: துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், வணிக வரித் துறை உதவி ஆணையா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ஆகிய பதவிகள் குரூப் 1 தொகுதியில் வருகின்றன.
இவற்றில் உள்ள 92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி நடைபெற்றது.
இதையும் படிக்க: உணவகங்களில் மது விற்றால் நடவடிக்கை!
இந்தத் தோ்வை எழுத 3.22 லட்சம் போ் விண்ணப்பித்த நிலையில், 1.9 லட்சம் போ் மட்டுமே எழுதினா். இந்த நிலையில், முதல்நிலைத் தோ்வு முடிவு கடந்த ஏப்ரலில் வெளியானது. இதைத் தொடா்ந்து, முதன்மைத் தோ்வு நாளை(ஆக.10) நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.