உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு என்எல்சி நிறுவனம் கட்டுப்பட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் குறித்து உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு என்எல்சி நிறுவனம் கட்டுப்பட முன்வர வேண்டும். தமிழ்நாடு முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் 18 ஆவது நாள் உண்ணாவிரத போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பிஆர்.பாண்டியன்
நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் 18 ஆவது நாள் உண்ணாவிரத போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பிஆர்.பாண்டியன்

சிதம்பரம்: நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் குறித்து உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு என்எல்சி நிறுவனம் கட்டுப்பட முன்வர வேண்டும். தமிழ்நாடு முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பிஆர்.பாண்டியன் நெய்வேலியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் 18 ஆவது நாள் உண்ணாவிரத போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால் கடலூர் மாவட்டம் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பு பெருகும்.தொழில் வளம் பெருகும் என்கிற நோக்கத்தில் தனக்கு சொந்தமான நிலங்களை எல்லாம் கொடுத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால் 33 ஆண்டுகளாக இன்று வரையிலும் நாள் 1க்கு ரூபாய் 430 முதல் 750 வரையிலும் சம்பளம் பெற்றுக் கொண்டு அன்றாடம் தினக் கூலிகளாக ஆதரவற்ற நிலையில், பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றி வருகிறார்கள். அன்றாடம் உயிரை பணையம் வைத்து நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி ஏற்படும் என்ற நோக்கோடு பணியாற்றி வருகிற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தான் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்க மறுப்பதோடு, தொடர்ந்து அச்சுறுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் இன்று 18-வது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி உள்ளத. இந்த உண்ணாவிரத போராட்டம் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாக்கி இருக்கிறது.கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வேறு பார்வையை உள்ளடக்கி நீதிமன்றம் மூலமாக என்எல்சி நிர்வாகம் ஒடுக்கி வந்தது. ஆனால் இன்றைக்கு நீதிமன்றங்கள் நிலம் கொடுத்த விவசாய குடும்பங்களுக்கு உரிய உத்தரவாத்தின் அடிப்படையில் வேலை அளிக்காததை கருத்தில் கொண்டு அது குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைப்பதற்கு நகருத்து கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சட்டப்படி என்எல்சி நிர்வாகம் செயல்படுவது உண்மையானால் நீதிமன்ற நடவடிக்கைக்கு உடன்பட வேண்டும். உற்பத்தியை உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு உரிய உரிமையை வழங்குவதற்கு முன் வர வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்.

விவசாயிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வந்திருக்கிறோம். காரணம் எங்கள் விவசாய குடும்பங்கள் நிலத்தை இழந்து நிர்க்கதியான நிலையில் நீதி கிடைக்க வேண்டும் என அமைதி வழியில் போராடுகிற தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைக்கு நீதிமன்றம் தீர்வுகான முன் வந்துள்ள போது என்எல்சி நிர்வாகம் அதனை ஏற்க மறுத்து மறைமுகமாக சூழ்ச்சியில் முயற்சித்து வருவதை தமிழ்நாடு முதல்வர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு அரசு நீதிக்கு கிடைக்க உரிய உதவிகள் செய்திட வேண்டும். இல்லையேல் விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக்க வேண்டிய நெருக்கடி வந்திருக்கிறது. இந்த தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது. விவசாயிகளுடைய ஒப்புதல் இல்லாமல் நிலங்களை அபகரிப்பதையும் ஏற்க மாட்டோம். 

பசுமை தீர்ப்பாயம் என்எல்சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீதிமன்றத்தில் உண்மை நிலையை தெளிவு படுத்தி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை வெளியேற்றி மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் பி.ஆர்.பாண்டியன்.

பேட்டியின் போது கடலூர் மாவட்ட செயலாளர்  மணிக்கொள்ளை ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com