
கனடாவில் இந்து கோயில் மீது காலிஸ்தான் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 4வது முறையாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் மற்றும் அவமரியாதை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18ஆம் தேதி கலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரிக்க வேண்டும் என சுவரொட்டிகளில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
கனடாவிலுள்ள மிகப் பழமைவாய்ந்த கோயிலான லக்ஷ்மி நாராயணன் கோயில் வாயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இதன் விடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதே ஆண்டில் கனடாவில் 4வது முறையாக இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்பு ஒண்டரியோ பகுதியிலுள்ள சுவாமிநாராயண் கோயிலில் ஏப்ரல் மாதம் காலிஸ்தான் அட்டூழியம் நடந்தது. மிஸ்ஸிஸாகுவா பகுதியிலுள்ள ராமர் கோயிலில் பிப்ரவரி மாதமும், பிராம்டன் பகுதியிலுள்ள கோயிலிலும் காலிஸ்தான் அவமதிப்பு நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.