தமிழகத்தின் 21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழக காவல் துறையில் 21 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படவுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகை
குடியரசுத் தலைவர் மாளிகை
Updated on
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழக காவல் துறையில் 21 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு, குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் தாம்பரம் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி. கே.புவனேஷ்வரி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த 19 பேருக்கு வழங்கப்படுகின்றன.

இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com