ஆளுநர் விருந்தில் பங்கேற்காதவர்களுக்குத்தான் நஷ்டம்: தமிழிசை பேட்டி

ஆளுநர் விருந்தில் பங்கேற்காதவர்களுக்குத்தான் நஷ்டம், நல்ல சாப்பாட்டை தவறவிட்டுவிட்டீர்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக பேசியுள்ளார். 
ஆளுநர் விருந்தில் பங்கேற்காதவர்களுக்குத்தான் நஷ்டம்: தமிழிசை பேட்டி

ஆளுநர் விருந்தில் பங்கேற்காதவர்களுக்குத்தான் நஷ்டம், நல்ல சாப்பாட்டை தவறவிட்டுவிட்டீர்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக பேசியுள்ளார். 

புதுச்சேரியில் காலையிலும் தெலங்கானாவில் மாலையிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேநீர் விருந்து அளிக்கிறார்.

இதன்படி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை காலை 11.30 தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஏற்கனவே காங்கிரஸ்-திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்போம் என அறிவித்ததால் அவர்கள் வரவில்லை. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்ற ஆளுநர் முதலமைச்சர், அமைச்சர்களுடன் உணவு அருந்தினார். மேலும் தனது கையால் முதலமைச்சர், அவைத் தலைவருக்கு உணவு பறிமாறினார். 

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் பங்கேற்க வேண்டும் என்றும், ஆளுநர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு வந்தால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் இங்கு யாருக்கும் நஷ்டமில்லை. அவர்களுக்குத்தான் நஷ்டம். அன்போடு அழைத்ததன்பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து கூறி பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம் என தமிழிசை பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழகத்தில் ஆளுநர் விருந்து மழை காரணமாக நடத்தப்படவில்லை .மழை அங்கு அதிகமாக பொழிகிறது. இங்கு நாம் அனைவரையும் சகோதரத்துடன் அழைத்துக் கொண்டாட வேண்டும் என்பது ஆசை. காலம்காலமாக சுதந்திர தினத்தில் விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம், சுண்டைக்காய் நல்லது, அனைவருக்கும் தேவை என பார்த்து பார்த்து செய்தேன். இதில் கலந்துகொள்ளவில்லை என்பது பெருமைக்குரியது அல்ல. அரசியல், கொள்கைகளைத் தாண்டி நடைபெறும் வழிமுறை. இதில் வரவில்லை என்றால் எனக்கு எதுவும் குறையில்லை. வராதவர்களைப் பற்றி கவலை இல்லை. வந்தவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றோம்.

மேலும் நான் தமிழகத்தைச் சேர்ந்தவள். தமிழகத்தில் எது நடந்தாலும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது, தமிழகத்தில் தமிழிசை ஏன் மூக்கை நுழைக்கிறார் என திமுக அமைப்பாளர் சிவா கேட்கிறார். சுதந்திர தினத்தன்று ஒரு ஆளுநரைப் பார்த்து தமிழகத்தைப் பற்றி எப்படி பேச முடியும் என கேட்கிறார்கள். தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என கூறும்போது எனக்கு தெரிந்த உண்மையைக் கூறினேன். தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு இங்கு எப்படி பதில் சொல்லலாம். அதற்கு நான் வர மாட்டேன் என திமுக சிவா கூறுவதால் எனக்கு நஷ்டமில்லை. நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிவிட்டீர்கள். நல்ல சுண்டைக்காய், நல்ல கோபி மஞ்சூரியன், நல்ல குல்பி அனைத்தையும் மிஸ் செய்துவிட்டீர்கள். நாங்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டோம்' என சிரித்தபடியே கூறினார்.

புதுச்சேரி ஆட்சியை நான் பிடித்து வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் தவறாக கூறுகிறார்கள். புதுச்சேரியின் மீது அக்கறை இருப்பதால் தமிழகத்தில் இருந்து விமான நிலையத்தில் நிலத்தை வாங்கி தர வேண்டும். அதை விடுத்து புறக்கணிப்பு என்பதால் யாருக்கும் நஷ்டமில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com