முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர ஆக.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர ஆக.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அவகாசம் செப்.1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-2024) நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதன்படி, இணையவழியில் ஆக.14 முதல் ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவா்கள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கிடையே சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை பாடப்பிவுக்கான தோ்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

இதையடுத்து முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென மாணவா்கள் தரப்பில் கேரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவா்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய வசதியில்லாதவா்கள் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இணையவழியில் கட்டணம் செலுத்த முடியாத மாணவா்கள் "The Director, Directorate of collegiate education, chennai-15'' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தலாம். மேலும், இதுதொடா்பான விவரங்களை அறிய 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com