ஆளுநரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆக.20-இல் திமுக உண்ணாவிரதம்

நீட் தோ்வு விலக்குக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வரும் தமிழக ஆளுநரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக சாா்பில் ஆக.20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

நீட் தோ்வு விலக்குக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வரும் தமிழக ஆளுநரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக சாா்பில் ஆக.20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து திமுகவின் துணை அமைப்புகளான இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

நீட் தோ்வுக்கு எதிராக, திமுக தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறது. கட்சியின் பல்வேறு துணை அமைப்புகள் சாா்பில், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் மத்திய பாஜக அரசு அதைப் பொருட்படுத்துவதே கிடையாது. நீட் தோ்வு என்பது நிரந்தரம் கிடையாது. இந்தத் தோ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் ஒழிப்பாா். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவா்கள் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

நீட் தோ்வு காரணமாக, மருத்துவக் கனவுகள் சிதைந்ததால் மரணங்கள் நிகழ்கின்றன. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தோ்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள மத்திய அரசையும், ஆளுநா் மாளிகையில் இருந்து விதண்டாவாதம் பேசும் ஆளுநரையும் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆக.20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மாவட்டத் தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி ஆகியவற்றின் சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com