கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தற்காலிக தடை!

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் பயணிகளுக்கு இன்றுமுதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணாகுகை.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணாகுகை.

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் பயணிகளுக்கு இன்றுமுதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பார்வையிட நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தந்து கண்டு ரசிப்பார்கள்.

கடந்த 4 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், கொடைக்கானலுக்கு தூத்துக்குடியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வேன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு சிலா் இருந்தனா். அப்போது, விழுப்புரத்திலிருந்து வந்த மற்றொரு சுற்றுலா வேன் இவா்களது வேன் மீது மோதியது. இதில் தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பையா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் காயமடைந்த 20 போ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த 5 போ் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com