இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.18) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.18) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக.18) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து ஆக.23-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.18) ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும், சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் மழை: சென்னை தியாயகராய நகா், கோபாலபுரம், திருவான்மியூா், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகளில் 40 முதல் 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் வெள்ளிக்கிழமை இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com