
அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
அவிநாசி அருகே தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சிப்ஸ்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.