மாட்டு வண்டி எல்கை பந்தயம்: அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்!

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார்.
மாட்டு வண்டி எல்கை பந்தயம்: அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தார்!

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி - நத்தம் நெடுஞ்சாலையில், மறைந்த முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 8 கிமீ மற்றும் 6 கிமீ தொலைவிற்கான மாட்டு வண்டி எல்கை பந்தயம் தற்போது நடைபெற்றது. 

திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் ரா.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற பந்தயத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக இரு வண்ண கட்சிக் கொடியினை அசைத்து போட்டியினை துவக்கி வைத்தார். 

இதில் மதுரை, தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிமீ தொலைவிற்கான பந்தயமும், சின்ன மாட்டு வண்டிகளுக்கு 6 கிமீ தொலைவிற்கான பந்தயமும் நடைபெற்றது. 13 பெரிய மாட்டு வண்டி பந்தயத்தாரர்களும், 24 சிறிய மாட்டு வண்டி பந்தையதாரர்களும் போட்டியில் பங்கேற்றனர். 

பெரிய மாட்டு வண்டி போட்டியில், நெடுஞ்சாலையில் காளைகள் போட்டியாளர்களை சுமந்து கொண்டு நான்கு கால் பாய்ச்சலாக 4 கிமீ சீறி பாய்ந்து சென்றது. பின் மீண்டும் பந்தய எல்லையை வந்து அடைந்தது. இதில் பெரிய வண்டி போட்டியில் ரூ.50,001 ரொக்கம் மற்றும் முதல் பரிசு கோப்பையை அவனியாபுரம் எஸ்.கே.ஆர் மோகன்சாமிகுமார் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிக்கான போட்டியில், வாளிப்பாறை வாசகர் - முனுக்கோடை பொன்வீரன் ரமேஷ் கதிரவன் ரூ.25,001 ரொக்கம் மற்றும் முதல் பரிசு கோப்பையை பெற்றனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ரொக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com