பாஜக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது: முதல்வர்

பாஜக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
பாஜக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது: முதல்வர்

பாஜக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, உழவர்களுக்காக நாகையில் 50 இடங்களில் போராட்டத்தை ஒருங்ணித்தவர் எம்.பி. செல்வராஜ். செல்வராஜ் 4 முறை எம்.பி., அனைத்து முறையும் திமுக கூட்டணியில் அவர் வெற்றி பெறிறிருக்கிறார். இன்று மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனான கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும். 

இந்தியாவை காப்பாற்றவே இந்தியா கூடடணி அமைந்துள்ளது. இன்று தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம். தற்போது இந்தியாவை காப்பாற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கிவிட்டேன். மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. பாஜக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது. 7 திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்ததில் ரூ.132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரியவரும் என்று சிஏஜி தெரிவித்துள்ளது. ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை. பிரதமர் எங்கு சென்றாலும் இந்தியா கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுகிறார். திமுக பற்றி பேசாமல் பிரமரால் இருக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com