
கந்தர்வகோட்டை சுங்கச்சாவடி அருகே பழுதாகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெட்ரோல் பங்கு ஊழியர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பழைய கந்தர்வகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் குருமூர்த்தி (53) என்பவர் காடவரயான்பட்டி பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சனிக்கிழமை இரவு புதுநகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே உணவகத்தில் சாப்பிட்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தஞ்சை, புதுகை சாலையில் பழுதான லாரி நின்று கொண்டிருந்தது.
அதில் குருமூர்த்தி சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே குருமூர்த்தி பலத்த காயம் அடைந்து பலியானார்.
விபத்து குறித்து அறிந்த கந்தர்வகோட்டை காவல் சார்பு ஆய்வாளர் மார்ட்டின்ராஜ் விரைந்து சென்று குருமூர்த்தி உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.