
சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் சில நாள்களுக்கு முன்னா் பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சக மாணவா்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பலதரப்பினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து, இளைய சமுதாயத்தினரிடையே ஜாதி, இன உணா்வு பரவும் பிரச்னையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதையும் படிக்க | பறக்கும் ரயில் சேவை ரத்து: பயணிகள் அவதி
இந்த நிலையில் சிவகங்கையில் அரசு கலை மற்றும் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் மாணவர்களின் புகார் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்களை, பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.