மயிலாடுதுறை - சேலம் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம் 

மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கப்பட்டதால் ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
மயிலாடுதுறை - சேலம் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம் 

மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கப்பட்டதால் ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் இன்ஜின் முன்புறம் மாலை அணிவித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார். முன்னதாக ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது. 

பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பிடத்தக்கதாகும். சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைதூரம் செல்லக்கூடிய வண்டி என்பதால் இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறையில் இந்த ரயிலை நடைமேடை 1- இல் இருந்து இயக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், சாமி.கணேசன், சுந்தர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com