செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புதன்கிழமை அறிவித்துள்ளார்.
சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி.
சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி.

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புதன்கிழமை அறிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். அவரது கைது சட்டப்படியானது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதைத் தொடா்ந்து, அவரை அமலாக்கத் துறை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தாா்.

கடந்த திங்கள்கிழமையுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததைத் தொடா்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப். 15-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது என்றும், ஜாமீன் தொடா்பாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தை நாடுமாறும் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ முறையீடு செய்தாா்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை எம்எல்ஏ, எம்பிகளுக்கான சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com