
அவிநாசி: அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டது போத்தம்பாளையம் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவர், வெள்ளிக்கிழமை காலை போத்தம்பாளையம் புலிப்பார் சாலையில் 2 சிறுத்தைகள் சென்றதை பார்த்துள்ளார். மேலும் சிறுத்தைகள் இரண்டும் நாய்க்குட்டியை துரத்தி சென்றுள்ளதாகவும் மக்களிடையே கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வனத்துறையினர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரித்தனர்.
இதையும் படிக்க | அயோத்திதாசர் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்!
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் போத்தம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிறுத்தைகள் கால் தடயங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் வனத்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசியில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போத்தம்பாளையம் அருகே பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.