5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்:மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

சமீபத்தில் பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எல். முருகன்
எல். முருகன்

சென்னை: சமீபத்தில் பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மிஸோரம் மாநிலத்திலும் இதே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு திங்கள்கிழமை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், 5 மாநிலத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சமீபத்தில் பேரவைத் தேர்தல் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா், மிஸோரம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஐந்தாவது முறையாகவும், இந்தியாவின் இளம் மாநிலமும்,தென் மாநிலமான தெலங்கானாவில் முதல் முறையாகவும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.மிஸோரமில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸும் ஆளுங்கட்சியாக உள்ளன.

தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி,மிஸோரமில் திரிசங்கு பேரவை அமையக் கூடும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com