

சேலம் அருகே மேச்சேரி சித்திகுள்ளானூர் பகுதியில் யானைகள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் துகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு சித்திகுள்ளானூர் பகுதியில் இரண்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அப்போது யானைக்கு முன்பாக நின்று சொல்பி எடுத்த கோட்டியான் தெருவைச் சேர்ந்த தீபக் என்ற கல்லூரி மாணவனை யானையில் தாக்கியதில் காயமடைந்த மாணவன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில்,மேட்டூர் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க| தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!!
யானைகள் கிராமத்தில் நுழைந்திருப்பதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஒளிப்பெருக்கு மூலம் ஊராட்சி சார்ர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் மேச்சேரிக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.