திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் தலைவராக கடந்த 1962ல் பெரியாரால் நியமிக்கப்பட்டார்.
கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில்சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்திலும் கி. வீரமணிக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 15 மணி நேர சோதனை நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.