புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது: தமிழ்நாடு வெதர்மேன்

மிக்ஜம் புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது: தமிழ்நாடு வெதர்மேன்
Published on
Updated on
1 min read


சென்னை: மிக்ஜம் புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜம் புயலானது எந்தப் பாதையில் கடக்கவிருக்கிறது என்பது குறித்த கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சூறாவளி வெகு தொலைவில் உள்ளது அதேவேளையில் இதனால், டிசம்பர் 3ஆம் தேதி காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பதிவான மழைப்பொழிவு குறித்த தகவல்கள் இதோ. 

அதாவது, புயல் பயணிக்கும் பாதைகள் கணிக்கப்பட்ட மாடல்களுக்கு இடையே ஒருமித்த கருத்து வந்துவிட்டது, மிக்ஜம் புயல் தனக்கான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது. அதன் பயணத்துக்கு இன்னும் 24 மணிநேரம் உள்ளது, இப்போது பாதையில் பெரிய மாற்றம் இருக்காது.

இந்த புயலானது சென்னைக்கு மிக அருகில் வரும். இதனால் மிகவும் அடர்த்தியான மேகங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மீது விழும். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க மழை பெய்யும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் தீவிர மழை பெய்யும் நிகழ்வுக்கு அதிக சாத்தியம் உள்ளது. காத்திருந்தது இதற்காகத்தான். இந்த நாள் இப்போது வந்துவிட்டது.

இதுபோன்ற தீவிர மழைக்கான எச்சரிக்கைகளை நான் மிகவும் அரிதாகவே வெளியிட்டிருக்கிறேன். நவம்பர்-15,16, 2015, டிசம்பர் 1-2, 2015, டிசம்பர் 11-12,2016 மற்றும் இப்போது டிசம்பர் 3-4, 2023 என அறிந்துகொள்ளலாம்.

ஆனால், இது 2015 வெள்ளம் போல் மாறும் என்று அர்த்தம் இல்லை, இது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் 200 மி.மீ. மழை வரை ஒரே இடத்தில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறலாம் என தெரிவித்திருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com