மிக்ஜம் தாண்டவம்: மேடவாக்கத்தில் மழைநீரில் அடித்து செல்லும் கார்கள்!

அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்


சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக,சென்னை மேடவாக்கம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

மிக்ஜம் புயல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சென்னை மேடவாக்கம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள்பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோன்று சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், கட்டடத்திற்கு கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பாய்ந்தோடும் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையை அழித்துவிட்டு செயற்கையை உருவாக்கினால் இயற்கை கொடுக்கும் பரிசு இது தானோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com