மிக்ஜம் புயல்: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவைதான்!

மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மிக்ஜம் புயல்: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவைதான்!

மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்திட உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் சென்னையில் கழிவுநீரை அகற்றுவதற்காக 325 கழிவுநீர் அகற்றும் மோட்டார்கள், 546 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தூர் வாருவதற்காக 540 வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

கனமழையால் வீழந்த மரங்களை அகற்றுவதற்கு 272 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 8 தானியங்கி உயர்நிலை மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

மழைநீரை அகற்றுவதற்காக 990 பல்வேறு திறன் கொண்ட மோட்டார் பம்புகளும் கால்வாய்களில் தூர்வார 2 ஆம்பியன் வாகனங்கள், 4 ரோபாட்டிக் எக்ஸ்லேட்டர்கள் மற்றும் 3 மினி ஆம்பியன் வாகனங்கள் பணியில் உள்ளன. 

101 நடமாடும் மருத்துவ குழுக்களும் 169 நிவாரண மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 318 மருத்துவ அலுவலர்களும் 635 செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசின் அறிவுறுத்தல்கள்:

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.

அத்தியாவசியச் சூழ்நிலை காரணமாக வெளியில் வர நேரிட்டால் மின்சார கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். 

மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com