மிக்ஜம் புயல்: சென்னையில் இதுவரை 7 பேர் பலி

சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜம் புயல்: சென்னையில் இதுவரை 7 பேர் பலி

சென்னை: சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 100 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி லோன் ஸ்கொயர் சாலையில் பத்மநாபன்(50), துரைப்பாக்கத்தில் கணேசன்(70) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மரம் விழுந்ததில் பெசன்ட் நகரில் முருகன்(35) என்பவர் பலியானார்.

மேலும், பட்டினம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத ஒருவரும், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய பகுதிகளிலும் அடையாளம் தெரியாத மற்றொருவரும் சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை கானத்தூர், இந்திராகாந்தி தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தின் சுவர் இன்று காலை இடிந்து விழுந்ததில் ஜாகீர்(20)  மற்றும் அப்ரோஸ்(30) ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

சென்னையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com