அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 டிசம்பர் 2023, 8:24 am

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக ஆவடியில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, ஆந்திர கரையை நோக்கி நகர்ந்து நாளை காலை கரையைக் கடக்கவுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக ‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (டிச. 4) அதாவது இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.