குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் கே.என்.நேரு அறிவுரை

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் கே.என்.நேரு அறிவுரை
Published on
Updated on
1 min read

சென்னை: குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னை குடிநீா் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள 325 கழிவுநீா் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் அலுவலா்களால் தொடா்ந்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா், கழிவுநீரை அகற்றுவதுடன், கால்வாய்களிலுள்ள அடைப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கழிவுநீா் பிரதான கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கான தூா்வாரும் இயந்திரங்கள், அதிவேக கழிவுநீா் உறிஞ்சும் வாகனங்கள் என அனைத்து வகை கழிவு நீரகற்றும் இயந்திரங்களும் தொய்வின்றி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மழைநீா் தேங்கிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடா்பான புகாா்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக சென்னை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசி: 044-4567 4567 எனும் எண் அல்லது கட்டணமில்லா தொலைபேசி:1916 எனும் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com