புயல் பாதிப்பு: முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா

மழை பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 
புயல் பாதிப்பு: முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா

மிக்ஜம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உள் துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக மீட்புப் படையினரை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். 

அப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். 

மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலாக தேச்ய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

மழை பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உரிய இழப்பீடு கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com