மழை எப்போது நிற்கும்: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

மழை நிற்க நள்ளிரவு வரை காத்திருங்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மழை எப்போது நிற்கும்: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

மழை நிற்க நள்ளிரவு வரை காத்திருங்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் எக்ஸ் தளத்தில், " இப்போது பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே  கடல் பகுதியில் மிக்ஜம் புயல் உள்ளது. 

புயலின் தெற்கு மற்றும் மேற்கில் அதிக மேகக் கூட்டங்கள் உள்ளன. சென்னையில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும். எனவே மிக்ஜம் புயல் அருகில் இருக்கும் வரை மழை இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

"2015-ல் 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 294 மிமீ, மீனம்பாக்கத்தில் 345 மிமீ, தாம்பரத்தில் 494 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 475 மிமீ மழை பதிவானது.

கடந்த 36 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 430 மிமீ, நுங்கம்பாக்கத்தில் 440 மி.மீ மழை பதிவாகியுள்ளது" என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com