மிக்ஜம் புயல் எதிரொலி: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

மிக்ஜம் புயல் எதிரொலியால் சென்னை தீவுத்திடலில் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மிக்ஜம் புயல் எதிரொலியால் சென்னை தீவுத்திடலில் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஃபாா்முலா ரேஸிங் சா்க்யூட் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சா்க்யூட் பந்தயங்களான ‘பாா்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘இந்தியன் ரேசிங் லீக்’ காா் பந்தயங்கள் வரும் டிசம்பா் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.

இந்தப் பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கிடையில், மிக்ஜம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தற்போது சென்னை ஃபார்முலா 4  கார் பந்தம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com