
திருநெல்வேலி: பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டிசம்பா் 6-ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசாரும், மாநகரில் 600-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையும் படிக்க | யுஜிசி - நெட் தேர்வு:மிக்ஜம் பாதிப்பில் இருந்து சென்னை மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா?
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், முக்கிய சாலைகளில் காவல்துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணா்களை கொண்டு சோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.