தெக்கலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத தெக்கலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெக்கலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அவிநாசி: அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத தெக்கலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் ,சாலை வசதி, சாக்கடை  வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்து தராமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
சென்னிமலை பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து,முடுகல் அமைக்காமல் விடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் முறையாக பதில் அளிக்கப்படவில்லை. சென்னிமலை பாளையம் ஆதி திராவிடர் காலனி அருகே நீண்ட நாளாக சாக்கடை கழிவு நீர் சாலையில் சொல்வதால் அருகே உள்ள பள்ளி குழந்தைகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதேபோன்று செங்காளி பாளையம் பகுதியில் திட்டமிட்டபடி முறையாக சாக்கடை குழாய் அமைக்கப்படவில்லை. மேலும் சென்னிமலை பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் சூரியபாளையம் வரை குழாய் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக போடாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். 

வெள்ளாண்டி பாளையத்தில் மூன்று சாலை சந்திப்பில் பாலம் பழுதடைந்து இடிந்து நீண்ட நாட்களாக கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. 2021 இல் குடிநீர் இணைப்புக்காக பணம் செலுத்தப்பட்டது. மேலும்  ஓராண்டாக குடிநீர் கட்டணம் செலுத்தியும் இது வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுபோன்று அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படல்லை. 

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் முறையாக பதிலளிப்பது இல்லை.பொது மக்களை அலட்சியப்படுத்துகின்றனர் என்று தெரிவித்தனர்.

தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார், அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com