
கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளோம். அதிகாரிகளுடன் இன்று ஆன்லைன் வழியில் ஆய்வு கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. தற்போது மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 32 பள்ளிகளில் மட்டும் சுவற்றில் தண்ணீர் ஊறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம். குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 20,000 புத்தகங்கள் சேதுமடைந்துவிட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.