9 நாள்களுக்கு பின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு!

நிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை(டிச.11) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டது.


சென்னை: நிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை(டிச.11) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 4.12.2023 முதல் 9.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

‘மிக்ஜம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, திங்கள்கிழமை (டிச.11) பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, சுத்தம் செய்யும் பணிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ. 40 லட்சமும், ஆக மொத்தம் ரூ.ஒரு கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க திங்கள்கிழமை (டிச.11) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, செவ்வாய்க்கிழமை(டிச.12) பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிடவும் உத்தரவிட்டார்.

மேலும், ஏற்கெனவே,திங்கள்கிழமை (டிச.11) அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகளை புதன்கிழமை (டிச.13) தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 9 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை(டிச.11) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

9 நாள்களுக்குப் பின் மீண்டும் பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்றனர்.

9 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உரையாடினார்.

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் பாதிப்பு குறைந்த நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து மக்கள், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வதால் சாலைகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com